இறால் மஞ்சூரியன் (1)
தேவையான பொருட்கள்:
இறால் - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
சோயாசாஸ் - 1 பெரியகரண்டி
மிளகாய் தூள் - 1/2 கரண்டி
சோள மாவு - 100 கிராம்
மைதா மாவு - 100 கிராம்
முட்டை - 1
அஜினமோட்டோ, உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். கிழங்கை மெல்லியதாக நறுக்கவும்.
முட்டையை கலக்கி அதில் சோளமாவு, மைதா மாவு சேர்த்து கலக்கி அதில் இறாலை போட்டு 2 நிமிடம் பொரிக்கவும்.
அதே போல் கிழங்கையும் பொரிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அதில் சாஸ், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதில் இறால், கிழங்கை போட்டு தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும்.