இறால் பஜ்ஜி (1)
தேவையான பொருட்கள்:
இறால் பெரியது - 500 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங்பவுடர் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
பூண்டு பல் - 8
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ரீஃபைண்டு ஆயில் - பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் 2 மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும், உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து 2 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இறாலை வால் பகுதியை தவிர்த்து மீதி தோல்களை நீக்கி சுத்தம் செய்யவும், அதில் பூண்டை நசுக்கி போடவும்.
மேலும் உப்பு, மிளகு தூள், அஜினமோட்டோ போட்டு பிசறி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் காய வைக்கவும். இறாலை வால் பகுதியை பிடித்து மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் பஜ்ஜிகளை பொரித்து எடுக்கவும். இது சில்லி சாஸ், மீன் சாஸ்(நுக் மம்) இவைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நம்மவர்கள் சாஸ் எதுவுமில்லாமலேயே சாப்பிடுவார்கள்.
குறிப்புகள்:
இது வியட்நாம் பஜ்ஜி, எல்லோராலும் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி.