இறால் சிப்ஸ்
தேவையான பொருட்கள்:
கழுவி சுத்தம் செய்த இறால் - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
உள்ளி(பூண்டு) விழுது - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி(விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை(வெள்ளை கரு) - (1-2) (அடித்தது)
(காய்ந்த )பாண் (ரஸ்க்) தூள் - தேவையான அளவு
செய்முறை:
கழுவி சுத்தம் செய்த இறால், மஞ்சள்தூள், உப்பு, இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு)விழுது, (விரும்பினால்) அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து லேசாக பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
அதன் பின்பு ஊறவைத்த இறலை லேசாக நசுக்கி முட்டையில் நனைத்து பாண் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும். அதன் பின்பு பரிமாறவும் .
குறிப்புகள்:
அசைவ உணவு பிரியர்களின் மிக மிக விருப்பமான உணவு இது. (1)கவனிக்க வேண்டிய விஷயங்கள் - சோற்றுடனும்(சாதம்) சாப்பிடலாம் அல்லது தனியாகவும் சாப்பிடலாம். (2)எச்சரிக்கை - இறால் அலர்ஜி உடையோர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். (3)மாற்று முறை -விரும்பினால் முட்டைக்கு பதிலாக கடலைமாவை தண்ணீரில் கரைத்தும் (பட்சிமா பதம்) பயன்படுத்தலாம்