இறால் சாதம்
0
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 500 கிராம் சுத்தம் செய்த இறால் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 4 ப்ளம்ஸ் - 50 கிராம் பச்சை மிளகாய் - 7 நெய் - 50 கிராம் மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
அரிசியை நன்றாகக் கழுவி நீரை வடித்துக் வைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
ரைஸ் குக்கரில் நெய்யை விட்டு சூடானதும் வெங்காயம்
மிளகாயைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வரும் போது சுத்தம் செய்த இறாலைப் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் அரிசி
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
அரிசியின் அளவிற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி மூடி விடவும். சாதம் வெந்ததும் இறக்கவும்.
சுவையான இறால் சாதம் தயார்.