இறால் சம்பால்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்

மிளகாய்வற்றல் - 15

சின்னவெங்காயம் - 6

பூண்டு - 2 பல்

தக்காளி - 1

எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - 1 தேக்கரண்டி

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைக்கவும். மிளகாய் வற்றலை வெந்நீரில் ஊற வைக்கவும்.

ஊறவைத்த மிளகாய் வற்றலோடு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து மையாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் சூடாக்கி அரைத்த கலவை, உப்பு, சர்க்கரை சேர்த்து பச்சை வாசனை போக 5 முதல் 10 நிமிடம் வதக்கவும்.

இறாலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச்சாறு கலந்து மேலும் 1 நிமிடம் கழித்து இறக்கவும். ரசம் சாதம், தயிர் சாதம், நெய்சாதத்தோடு சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

மிளகாய் அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் சம்பால் நல்ல ட்ரையாக வரும். சப்பாத்திக்கு தோசைக்கு தொட்டுக் கொள்ள கிரேவியாக வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்கலாம். இறுதியில் தேங்காய் பால் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் கிரேவி சுவையாக இருக்கும்.