இறால் கருவாட்டுச் சம்பல்
தேவையான பொருட்கள்:
இறால் கருவாடு - 200 கிராம் செத்தல் மிளகாய் - 10 சோயா சாஸ் - 50 மி.லி எண்ணெய் - 75 மி.லி சீனி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கருவாட்டு சம்பல் செய்ய தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகாயை வறுத்துக் கொண்டு ப்ளெண்டரில் போட்டு உடைத்து தூளாக்கிக் கொள்ளவும்.
இறால் கருவாட்டையும் லேசாக வறுத்து மாவாக அரைக்காமல் பொடியாக்கிக் கொள்ளவும்.
பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் பொடியை போடவும்.
மிளகாய் சிறிது பொரிந்ததும் சோயா சாஸை ஊற்றிக் கலக்கவும்.
சூடாகியதும் இறால் தூளைக் கொட்டிக் கிளறவும். எல்லாம் ஒன்றாக நன்கு சேர்ந்ததும் அதில் சீனியைக் கொட்டி பிரட்டி விட்டு இறக்கவும்.
சுவையான இறால் கருவாட்டுச் சம்பல் தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.