இறால்புக்கை
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 500 கிராம்
இறால் - 1 கிலோ
கத்தரிக்காய் - 300 கிராம்
பூசணிக்காய் - 300 கிராம்
பூண்டு - 5 பல்
மிளகுதூள் - 1\2 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - 1\2 தேக்கரண்டி
சின்னவெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டு என்பவற்றின் தோல் உரித்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
கத்தரிக்காய், பூசணிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்து வரும்போது இறால், அரிசி சேர்த்து அவிய விடவும்.
அரிசி 1\4பங்கு வெந்ததும் கத்தரிக்காய், பூசணிக்காய், பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து அவியவிடவும்.
அரிசி 1\2 பங்கு வெந்ததும் தேங்காய்ப்பாலில் மிளகுதூள், உப்பு, மிளகாய்த்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி அதனுள் விட்டு கலக்கி அவியவிடவும்.
அரிசி முழுவதும் வெந்ததும் இறக்கவும். சுவையான இறால்புக்கை தயார்.
குறிப்புகள்:
இலங்கையில் பச்சை அரிசியில் செய்யும் சாதத்தை, குழைய சமைத்து எடுத்தால் புக்கை என்பார்கள். பொங்கல் செய்தபின் பொங்கலை புக்கை என்று கூறுவார்கள். அதனால் இறாலில் செய்யப்படும் சாதத்தை இறால்புக்கை என்று சொல்வோம்.
விரும்பினால் காய்கறி சேர்த்துக்கொள்ளும்போது தக்காளிப்பழம் சேர்க்கலாம். இறக்கியபின்பு தேசிக்காய்ப்புளி சேர்க்கலாம்.