இன்ஸ்டன்ட் சீடை
தேவையான பொருட்கள்:
அரிசி மா - 200 கிராம்
மைதா மா (கோதுமைமா) (வறுத்தது) - 50 கிராம்
பச்சைமிளகாய் (நறுக்கிய) - 5
பெருங்காயம் - சிறிதளவு
சமையல் சோடா - சிறிதளவு
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
தண்ணீர் -தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசிமா, வறுத்த மைதாமா (கோதுமைமா), நறுக்கிய பச்சைமிளகாய், பெருங்காயம், சமையல் சோடா, பொட்டுக்கடலை, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.
பிசைந்தவற்றை சீடைகளாக உருட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதை சூடாக்கவும்.
அது சூடானதும் அதில் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும். எண்ணெய் கொதித்ததும் அதில் உருட்டிய சீடைகளை போட்டு பொரிக்கவும்.
சீடைகள் பொரிந்ததும் கரகரப்பான சீடை தயாராகிவிடும். அதை ஒரு தட்டில் போட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
செய்வதற்கு இலகுவானதும், சுவையானதும், மினரல், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், கொழுப்புசத்துகள் ஆகியன நிறைந்ததுமான ஓர் சிற்றுண்டியே இன்ஸ்டன்ட் சீடையாகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - பிசைந்தவற்றை சீடைகளாக உருட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும், எண்ணெய் கொதித்ததும் அதில் உருட்டிய சீடைகளை போட்டு கரகரப்பாக பொரிக்கவும். எச்சரிக்கை- இருதய நோயாளர், சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.