இனிப்பு நோகி பாஸ்தா (Sweet Gnocchi)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 பெரியது
கோதுமை மா - 1 கப்
சோள மா - 2 மேசைக்கரண்டி
உப்பு
ஏதாவதொரு மார்மலேட்/ஜாம்
றஸ்க் தூள் - 2 கப்
கறுவா தூள் - 1 தேக்கரண்டி
பட்டர் - 2 மேசைக்கரண்டி
சீனி - 1/4 கப்
செய்முறை:
உப்பு, கோதுமை மா, சோளமாவினை கலந்து வைக்கவும்.
றஸ்க் தூளை சிறிது கொரகொரப்பான மாவாக அடித்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை நன்கு உப்பு போட்டு அவித்து ஆற வைக்கவும்.
பின்னர் அதனை பெரிய கண் உள்ள முறுக்கு/இடியாப்ப உரலில் போட்டு கட்டியில்லாமல் பரவலாக பிழிந்து வைக்கவும்.
அதனுள் சிறிது சிறிதாக மாவினைச் சேர்த்து மென்மையாக சப்பாத்தி மாவினைப் போல பிசையவும்.
பின்னர் மாவினை எலுமிச்சம் பழம் அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டையையும் மோதகம் செய்வதுபோல கிண்ணங்களாக பிடித்து அதனுள் ஏதாவதொரு மார்மலேட்/ஜாம் வைத்து மூடி உருட்டி சிறிது தட்டையாக்கி வைக்கவும். (கட்லெட் போல)
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
அடுப்பின் தீயைக் குறைத்து கொதிக்கும் தண்ணீருள் இந்த உருண்டைகளை போட்டு உடைய விடாது அவிக்கவும்.
அதே நேரம் ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு சிறிது உருக்கி அதனுள் றஸ்க் தூளைப் போட்டு பிரட்டி அதனுள் கறுவா தூள், சீனி சேர்த்து 5 நிமிடங்களுக்கு கிளறவும்.
பின்னர் இந்த கலவையினுள் அவிந்து கொண்டிருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு கலவை உருண்டை முழுவதும் பிரளும்படி உருட்டி தட்டில் அடுக்கி பரிமாறவும்.