இத்தாலியன் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சக்கரை வள்ளி கிழங்கு - 50 கிராம்

ஆப்பிள் - ஒன்று

கார்ன் - 50 கிராம்

பைனாப்பிள் - இரண்டு ஸ்லைஸ்

கேரட் - ஒன்று

ப்ரஷ் க்ரீம் - 100 மில்லி

மையானைஸ் - 100 கிராம்

ஒயிட் பெப்பர் - ஒரு தேக்கரண்டி

உப்பு - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:

எல்லா காய்கள், பழங்களை ஒரே சீராக நறுக்கி இட்லி பானை (அ) மைக்ரோவேவில் சிறிது உப்பு சேர்த்து அவிக்கவும். வெந்ததும் தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு வாயகன்ற பவுளில் வைக்கவும்.

அதில் முதலில் நெஸ்லே ப்ரெஷ் க்ரீமை போட்டு நன்கு கலக்கவும்.

பிறகு ஒயிட் பெப்பர், உப்பு, லெமென் ஜுஸ் சேர்த்து நன்கு கலக்கி மையானஸையும் கலக்கி பரிமாறவும்.

சூப்பரான இத்தாலியன் சாலட் ரெடி.

குறிப்புகள்:

குழந்தைகள் காய்கறி சாப்பிடவில்லையா கவலையை விடுங்கள். இப்படி கொடுத்து பாருங்கள் ஒரு சிறிய பவுளில் ஸ்பூன் போட்டு நல்ல விரும்பி சாப்பிடுவார்கள்.

இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு இல்லாதவர்கள், உருளைக்கிழங்கும் சேர்க்கலாம், பீன்ஸ் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.