இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - அரை சுண்டு

ரவை - ஒரு சுண்டு

ஜஸ் கட்டி - தேவையானளவு

தண்ணீர் - தேவையானளவு

ஆப்பச்சோடா - அரை தேக்கரண்டி(விரும்பினால்)

உப்பு - தேவையானளவு

செய்முறை:

உளுந்தை (அரை - ஒரு) மணித்தியாலம் ஊறவைக்கவும். அடுப்பில் தாட்சியை வைத்து அதில் ரவையை போட்டு அதை பொன்னிறமாக வறுக்கவும்.

வறுத்த ரவையை ஆறவிடவும். கிரைண்டரில்(மிக்ஸியில்) உளுந்தை போட்டு அதனுடன் தண்ணீர் விட்டு அதை இட்லி பதத்திற்கு அரைக்கவும்.

நன்றாக இட்லி பதத்திற்கு அரைத்த பின்பு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதன் பின்பு கிரைண்டரில் (மிக்ஸியில்) வறுத்த ரவையுடன்,தண்ணீரை சேர்த்து கட்டியில்லாமல் அடித்து கலக்கவும்.

அரைத்த உளுந்து உள்ள பாத்திரத்தில் கட்டியில்லாமல் அடித்து கலந்த ரவையை சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் ஆப்பச்சோடா, ஐஸ்கட்டிகளை சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த கலவையை புளிக்கவைக்கவும் (6 - 8 மணித்தியாலம்).

கலவை புளித்ததும் அதில் உப்பை போட்டு கலக்கவும். பின்பு அடுப்பில் இட்லி செய்யும் பாத்திரத்தின் கீழ் பகுதியின் உள் முக்கால் பகுதிக்கு தண்ணீர் விட்டு அதனுள் இட்லி அவிக்கும் தட்டினை வைத்து அதன் மேற் மூடியால் மூடி பின்பு அதனை சூடாக்கவும்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சூடாகியதும் அதிலுள்ள நீராவி வெளியேறும்.

நீராவி வெளியேறிய பின்பு பாத்திரத்தினுள் காணப்படும் தட்டில் உள்ள குழிகளில் அரைத்த மாவை ஒரு குழி கரண்டியால் எடுத்து( ஒரு குழிக்கு முக்கால் கரண்டி வீதம் விட்டு) ஒவ்வொரு குழியின் முக்கால் பகுதிக்கும் விட்டு எல்லா குழிகளையும் நிரப்பவும்.

அதன் பின்பு பாத்திரத்தின் மேற்மூடியை மூடி அவிய விடவும்.

அவிந்த பின்பு மெதுமையான சுவையான இட்லிகள் தயாராகிவிடும். அதன் பின்பு இட்லி உள்ள தட்டை இறக்கி ஒரு பாத்திரத்தில் இட்லியை போட்டு சில மணித்தியாலம் மூடி வைக்கவும். பின்பு இதனைப்போல எல்லா இட்லிகளையும் அவிக்கவும்.

பின்பு ஒரு தட்டில் சில இட்லிகளை வைத்து அதனுடன் சம்பல் அல்லது சாம்பாரு அல்லது கறி அல்லது இட்லித்தூள் கலவை இவற்றில் ஒன்றுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

சுவையானதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும் விரும்பி உண்ணும் உணவு இட்லி ஆகும். அத்துடன் இது ஒரு பாரம்பரிய உணவாகும் இதில் வைட்டமின், கால்சியம், மினரல், பொட்டாஷியம் ஆகிய பலசத்துகள் அடங்கியது. அத்துடன் செய்வதிற்கு இலகுவானதுமாகும் ஆகவே இதனை செய்து பார்த்து இதன் சுவையை அறியவும். மாற்று முறை - ரவைக்கு பதிலாக 1 + 1/2 சுண்டு இட்லி அரிசி அல்லது பச்சரிசியை பாவிக்கலாம்.