இடியப்பம்
தேவையான பொருட்கள்:
சிவப்பு அரிசிமாவு - 11/2கப்
அவித்த கோதுமைமாவு - 1/2கப்
(Steamed White all purpose flour)
உப்பு - 1டீஸ்பூன் (அல்லது தேவையான அளவு)
சுடு தண்ணீர் - 2கப்
செய்முறை:
சிவப்பு அரிசிமாவு, அவித்த கோதுமைமாவு, உப்பு என்பவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
அதனுள் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மர அகப்பை ஒன்றால் நன்கு கிண்டவும்.
பின்னர் குழைத்த மாவினை இடியப்ப அச்சில் போட்டு இடியப்பத் தட்டில் இடியப்பங்களை பிழியவும்.
பின்னர் அவற்றை இட்லி பானை/Pasta makerஇல் அடுக்கி அவித்தெடுக்கவும்.
அவித்த இடியப்பங்களை ஒரு தட்டில் பரவலாக அடுக்கி பிடித்த கறி/குழம்பு/சொதியுடன் பரிமாறவும்.
குறிப்புகள்:
தண்ணீரை நன்கு பொங்க பொங்க கொதிக்கவிட்டு ஒரு கோப்பையில் ஊற்றி வைத்து சிறிது ஆவி அடங்கியதும் மாவில் ஊற்றி குழைக்கவும். இப்படி செய்தால் இடியப்பங்கள் மென்மையாக வரும். இடியப்பங்களை தட்டில் அடுக்கியவுடன் ஒரு மூடியால் மூடி விடவும். இப்படி செய்தால் அவை காயாமல் இருக்கும்.