இஞ்சி பக்கோடா
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 150 கிராம் அரிசி மாவு - 25 கிராம் இஞ்சி - 50 கிராம் பச்சை மிளகாய் - 50 கிராம் டால்டா - 25 கிராம் ஆப்பசோடா - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு பெருஞ்சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இஞ்சியுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கடலை மாவு
ஆப்ப சோடா
உப்பு
கறிவேப்பிலை
பெருஞ்சீரகம் (சோம்பு)
டால்டா
தண்ணீர் மற்றும் இடித்த பச்சை மிளகாய்
இஞ்சிக் கலவை ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்
அதில் கெட்டியாகப் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக கிள்ளிப் போட்டு நன்றாகப் பொரித்தெடுக்கவும்.
சுவையான இஞ்சி பக்கோடா ரெடி. நீங்கள் சாப்பிட்ட உணவை மிகவும் எளிதில் ஜீரணமாக்கும் சத்துகள் நிறைந்த ஸ்நாக் இது.