இஞ்சி தொக்கு
தேவையான பொருட்கள்:
இளசான இஞ்சி - 100கிராம்
மிளகாய்த்தூள் - 6 தேக்கரண்டி
புளி - தேசிக்காயளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
செய்முறை:
தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய இஞ்சியுடன் உப்பு, புளி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சி வைத்து (வாணலி வைத்து) கடுகு, பெருங்காயம் தாளித்து அதனுடன் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
அவை வதங்கியதும் இஞ்சி தொக்கு தயாராகி விடும். அதன் பின்பு அதை எடுத்து பரிமாறவும் .
குறிப்புகள்:
இஞ்சி (Zingiber officinale) உணவின் ருசி கருதி உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருள் ஆகும். இஞ்சி ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சியை உண்பதால் தீரும் நோய்கள்: பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக்கம்மல் ஆகும். ஆகவே அதில் செய்யப்படும் இஞ்சி தொக்கினை சுவையை அறிய இதனை செய்து சாப்பிடவும். 1) எச்சரிக்கை - மரவள்ளி கிழங்கு உணவுகளை சமைக்கும் போது அல்லது சாப்பிடும்போது இஞ்சி உணவுகளை சமைக்கவோ அல்லது சாப்பிடகூடாது. இவையிரண்டும் சேர்ந்தால் நஞ்சாகிவிடும் (மரவள்ளி கிழங்கிலுள்ள பால் இஞ்சியுடன் சேர்ந்தால் நஞ்சாகிவிடும். (2) கவனிக்க வேண்டிய விஷயங்கள்- தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய இஞ்சி.