இக்கான் பக்கார் (bbq fish) (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாறை அல்லது வவ்வா மீன்(pomfret) - 1

பழுத்த மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் - 5

தனியா - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள் கிழங்கு(fresh turmeric) - ஒரு செமீ துண்டு(மஞ்சள் தூள் பயன் படுத்தினால் 1/4 தேக்கரண்டி)

எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி

சின்னவெங்காயம் - 3

சீனி - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

மீனை முழுதாக சுத்தம் செய்து இரண்டு பக்கமும் லேசாக கீறி விடவும்.

மிளகாய், வெங்காயம், மஞ்சள், தனியா ஆகியவற்றை அரைத்து உப்பு எலுமிச்சை சாறு, சீனி கலந்து வைக்கவும்.

இக்கலவையில் 1ஸ்பூன் அளவு தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள கலவையை எண்ணெய் கலந்து மீனின் வயிற்று பகுதியிலும், ரெண்டு பக்கமும் தடவி 10 நிமிடம் ஊற விடவும்.

பார்பிக்யூவில் வைத்து மீனை சுட்டெடுக்கவும் எடுத்து வைத்துள்ள கலவையை எண்ணெயில் ஒரு நிமிடம் வதக்கி டிப்பிங் சாஸாக வைத்து பரிமாறவும்.

டிப்பிங் சாஸ்ஸில் விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளலாம்.

குறிப்புகள்:

பார்பிக்யூ அடுப்பு இல்லாதவர்கள் மண் பூந்தொட்டியில் முக்கால் பாகம் மணல் நிரப்பி அதன் மீது கரிகொட்டைகளை போட்டு தணல் ஏற்படுத்தி அதன் மீது இரும்பு வலை வைத்து மீனை சுடலாம். கரிக்கொட்டைகளை எரிக்க சமையல் எண்ணெய் பயன்படுத்தவும். OTG அவனில் பேக் செய்தும் எடுக்கலாம்.