ஆலூ பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிக்க: பொட்டேட்டோ ப்யூரி பவுடர் - 2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் - தேவையான அளவு உப்பு - அரை தேக்கரண்டி ஃபில்லிங் செய்ய : வேக வைத்த கோழி கேரட்

குடைமிளகாய்

பச்சை பட்டாணி வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று நசுக்கிய பூண்டு - சிறிது கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி மல்லித் தழை - சிறிது எண்ணெய - பொரிக்க

செய்முறை:

பொடியாக நறுக்கிய கேரட்

குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து அரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டு

பச்சை மிளகாய்

வெங்காயம் சேர்த்து வதக்கி கேரட்

பச்சை பட்டாணி

குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதில் வேக வைத்த கோழி

கரம் மசாலாத் தூள்

சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். மாவினுள் வைக்க ஸ்டஃப்பிங் தயார்.

பொட்டேட்டோ ப்யூரி பவுடரில் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் சற்று தளர்த்தியாக பிசைந்து வைக்கவும்.

மாவை எலுமிச்சை அளவு எடுத்து தட்டில் வைத்து கையால் தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைக்கவும்.

ஓரங்களில் இருக்கும் மாவை பூரணத்தின் மேல் வைத்து மூடி உருண்டையாக ஆக்கவும். இதே போல் மீதமிருக்கும் மாவு மற்றும் பூரணத்தை வைத்து செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ஆலூ பூரி தயார். மாலை நேர ஸ்நாக்ஸாக சாஸுடன் பரிமாறவும். 2 கப் அளவு பவுடர் எடுத்தால் 6 உருண்டைகள் வரை செய்யலாம்.

குறிப்புகள்: