ஆலு கோபி கிரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளை - 2

காலிப்ளவர்- 1 கப்

வெங்காயம்-2

தக்காளி-1

மீட் மசாலா- 2 ஸ்பூன்

இஞ்சி,பூண்டு விழுது- 2 ஸ்பூன்

கறிவேப்பிலை-1 கொத்து

பச்சைமிளகாய்-2

தயிர்- 3 ஸ்பூன்

மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

தேங்காய் பால்- 1கப்

உப்பு-தேவைக்கு

எண்ணெய்- 2 மேசை கரண்டி

செய்முறை:

காலிப்ளவரை சுடுநீரில் 5 நிமிடம் வைத்து பின் வடிகட்டி எடுக்கவும்.

உருளையை தோலுடன் நான்காக நறுக்கவும்.

இரண்டையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தயிர், உப்பு, 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மீட் மசாலா சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியது இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வாசனை போக கிளறவும்.

அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்

பின்னர் ஊற வைத்த கலவையை சேர்த்து தேங்காய் பாலும் விட்டு காய்கறிகளை வேகவிட்டு பிறகு பரிமாறலாம்

குறிப்புகள்:

உருளை கிரேவியில் வெந்ததும் உதிர்ந்துவிடும் என்பதால் தோலுடன் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அரைபதமாக வேக விட்டு தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து, காலிப்ளவர் அரைபதமாக இருக்கும் போது கிரேவியில் சேர்க்கலாம். மீட் மசாலா இல்லையென்றால் கறிமசாலா சேர்க்கலாம் .தேங்காய் சாதம்,புரோட்டா, சப்பாத்தி,பூரி,தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.