ஆலங்காய் பிட்டு
0
தேவையான பொருட்கள்:
சிவப்பு அரிசி மா - 1 கப்
உழுத்தம்மா - 1/4 கப்
தேங்காய்ப்பால்/பசுப்பால் - 1 1/2 கப்
துருவிய பனங்கட்டி/வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் - 4
உப்பு
செய்முறை:
அரிசிமாவை வறுத்து உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் 1/2 கப் தேங்காய் பாலை சூடாக்கி சிறிது சிறிதாக மாவினுள் சேர்த்து கிளறவும்.
மாவுக்கலவை கொழுக்கட்டை பதத்திற்கு வந்ததும் உழுத்தம்மாவை சேர்த்து குழைக்கவும்.
பின்னர் மாக்கலவையை சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைத்து அவித்து எடுத்து ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பாலையும் பனங்கட்டியையும் போட்டு காய்ச்சவும். ஏலக்காயை குற்றி போட்டு கலக்கவும்.
பனங்கட்டி கரைந்ததும் அதனுள் அவித்த உருண்டைகளைக் கொட்டி கிளறவும்
பால் வற்றியவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.