ஆப்ரிக்கன் ப்ரான் பிரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டைகர் இறால் - 10-15

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

அரைத்த புதினா விழுது - 1 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்

கார்ன்மாவு - 1 டேபிள்ஸ்பூன்

மைதா - 1 டேபிள்ஸ்பூன்

கேசரிகலர் - 1 பின்ச்

எண்ணெய் - 1 கப்

செய்முறை:

இறாலின் முன் பகுதியின் தோலை மட்டும் உரித்து வால் பகுதியின் தோலை விட்டு விடவும்.

நன்கு சுத்தம் செய்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து நீர் சேர்க்காமல் வேக வைத்துக்கொள்ளவும்.

இறாலில் புதினா பேஸ்ட்டை தடவவும்

கேசரிகலர், மைதா, கார்ன்மாவை மூன்றையும் நன்கு கலந்து இறாலில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

தடிமனாக கட் செய்து மசாலா தடவி பொரித்த பிரஞ்ச் பிரைஸுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: