ஆப்பிள் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு + தண்ணீர் - 2 கப்

ஆப்பிள் - ஒன்று

தக்காளி - 2

தேசிக்காய்சாறு (எலுமிச்சைச்சாறு) - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையானளவு

பெருங்காய்த்தூள் - கால் தேக்கரண்டி

மிளகு - ஒன்றரை தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி

காய்ந்தமிளகாய் - 2

கறிவேப்பிலை - தேவையானளவு

கடுகு - அரை தேக்கரண்டி

நெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

ஆப்பிளை தோல், விதை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.

தக்காளிப்பழத்தை கிரைண்டரில் (மிக்ஸியில்) அடித்து வடிகட்டி பருப்பு + தண்ணீருடன் கலக்குங்கள்.

அத்துடன் தண்ணீர் ஒரு கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்குங்கள்.

அதன்பின்பு மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தூளாக்கி கொள்ளவும்.

நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி அதனுடன் பருப்பு தண்ணீர் கலவையை சேருங்கள் .

அஇக்கலவை பொங்கி வரும்போது தேசிக்காய் (எலுமிச்சை) சாறு சேர்த்து இறக்குங்கள்.

இதோ ஆப்பிள் ரசம் தாயாராகிவிட்டது. இப்போது இதை பரிமாறுங்கள்.

குறிப்புகள்:

தினம் ஓர் ஆப்பிள் மருத்துவரைத் தூர வைக்கும் ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது இதயநோய்கள் எடைக்குறைவு கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது. ஆப்பிள்

நோய்களிலிருந்து மூளையை பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உயிர்சத்து சி நிறைந்தது இப்படிப்பட்ட ஆப்பிளுடன் புரதசத்து நிறைந்த பருப்பும் சேர்ந்து காணப்படும் உணவே ஆப்பிள் ரசமாகும். எச்சரிக்கை - ஆப்பிள் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.