ஆப்பிள் புடிங்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - ஒன்று
சீனி(சர்க்கரை) - தேவையானளவு
அல்லது சுகர் ஃபிரீ பவுடர் - ஒரு சிறிய பாக்கெட்
சோளம்மா(கார்ன்ஃப்ளார் மா) - ஒரு மேசைக்கரண்டி
கலர் எசன்ஸ் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை:
ஆப்பிளை வெட்டி இட்லி குக்கரில் வேகவைத்து அதன் தோலை உரித்து கொள்ளவும்.
அதன் பின்பு அவித்து தோல் உரித்த ஆப்பிளை ஏதேனும் புடிங் மோல்டில் நன்றாக அடைக்கவும்.
மோல்டில் அடித்த ஆப்பிளை ஒரு தட்டில் தலைகீழாக கவிழ்க்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் சோளம்மாவுடன் (கார்ன்ஃப்ளார் மாவுடன்) கலர் எசன்ஸ்ஸை சேர்த்து கரைக்கவும்.
இக்கலவையுடன் சீனி (சர்க்கரை) அல்லது சுகர் ஃபிரீ பவுடர் சேர்த்து கலக்கவும்.
அதன் பின்பு கவிழ்த்து வைத்த ஆப்பிள் மீது இக்கலவையை ஊற்றி ஃப்ரீட்ஜில் வைக்கவும்.
அதன் பின்பு அரை மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
ஆப்பிள் புடிங்கில் கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி அதிகமாக காணப்படும், ஆப்பிள் புடிங் மிக மிக சுவையானதும், சத்துடையதும், வித்தியாசமானது இது சர்க்கரைநோயாளர், இதயநோயாளர் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை ஆகும். மாற்று முறை - சீனிக்கு பதிலாக சுகர் ஃபிரீ பவுடர் - ஒரு சிறிய பாக்கெட் பாவிக்கலாம். எச்சரிக்கை - அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.