ஆப்பிள் டெஸர்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 4 சீனி - 550 கிராம் மைதா - 350 கிராம் முட்டை - 4 கறுவாத்தூள் - 25 கிராம் ப்ளைன் சோடா அல்லது காஸ் தண்ணீர் - 1/2 லிட்டர் பேக்கிங் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை கிரீம் எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 300 கிராம் சீனி மற்றும் கறுவாத்தூளை போட்டு கலந்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் 250 கிராம் மைதா

250 கிராம் சீனி

முட்டை

பேக்கிங் பவுடர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்துக் கரைக்கவும்.

இந்த கலவையை நன்கு அடித்துக் கரைத்து தோசை மாவு பதத்திற்கு வைத்துக் கொள்ளவும்.

ஆப்பிளின் தோலை சீவி விட்டு நடுவில் உள்ள தண்டை எடுத்து விடவும். பிறகு ஆப்பிளை வட்டமான துண்டுகளாக நறுக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிள் துண்டுகளை மீதமிருக்கும் மைதா மாவில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

அதன் பிறகு கரைத்து வைத்துள்ள கலவையில் போட்டு தோய்த்து எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தோய்த்து எடுத்த ஆப்பிள் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பொரித்து எடுத்த ஆப்பிள் துண்டுகளில் உள்ள எண்ணெயை ஒத்தி எடுத்து விட்டு கறுவாத்தூள்

சீனிக்கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

பின்பு ஒரு தட்டில் பொரித்த 3 ஆப்பிள் துண்டுகளை வைத்து அதற்கு இடையில் கிரீமை விட்டு

நடுவில் ஐஸ்க்ரீமை வைத்து பரிமாறவும். சுவையான ஆப்பிள் டெஸர்ட் தயார்.

அறுசுவை நேயர்களுக்காக இந்த சுவையான ஆப்பிள் டெஸர்ட்டை செய்து காட்டியவர் திருமதி. வத்சலா நற்குணம் அவர்கள். இலங்கை சமையல் செய்முறைகள் பலவற்றை நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றார். இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புகள்: