ஆப்பிள் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள்(தோலுடன் துருவியது) - ஒன்று

சீரகத்தூள் - ஒரு சிட்டிகை

மல்லித்தூள் - ஒரு சிட்டிகை

கறுவாபட்டைத்தூள் - ஒருசிட்டிகை

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

ஜாதிக்காய்தூள் - சிறிதளவு

மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி

ஆப்பிள் சாறு - அரை கப்

சீனி - ஒரு கப்

ஆலிவ் எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையானளவு

செய்முறை:

அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடாகியதும் அதில் ஒலிவ் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

சூடான எண்ணெயில் சீரகத்தூள், மல்லித்தூள், ஏலக்காய்தூள், கறுவாப் பட்டைத்தூள், ஜாதிக்காய்த்தூள், மிளகாய்தூள், ஆப்பிள், சீனி, உப்பு இவையாவற்றையும் வதக்கவும்.

சீனி நன்றாக பசையாகி(பேஸ்ட்)ஆகி எண்ணெய் பிரியும் வரை வதக்கிய பின் ஆப்பிள் சாறு சேர்க்கவும். இதோ ஆப்பிள் சட்னி தயார்.

குறிப்புகள்:

தினம் ஓர் ஆப்பிள் மருத்துவரைத் தூர வைக்கும். ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல்

உள்ளது. இதயநோய்கள், எடை குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது. ஆப்பிள் நோய்களிலிருந்து மூளையை பாதுகாக்கின்றன அத்துடன் ஆப்பிள் உயிர்சத்து சி நிறைந்தது. இப்படிப்பட்ட ஆப்பிளில் செய்யப்பட்டதும் சுவை நிறைந்ததுமான உணவுப் பொருளே ஆப்பிள் சட்னியாகும். எச்சரிக்கை - ஆப்பிள் அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் .