ஆப்பிள் கோவா சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - ஒன்று

கோவா (வெட்டிய) - 250 கிராம்

வெங்காயம் (பெரிய) - 2

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

தேசிக்காய்சாறு (லெமன் ஜூஸ்) - ஒன்று

குவாக்(மெல்லிய) - 2 மேசைக்கரண்டி

பிளம்ஸ்(சுல்டானாஸ்) - 2 மேசைக்கரண்டி

முந்திரிகை (உடைத்த கஜு) - 2 மேசைக்கரண்டி

சீனி (சர்க்கரை) - அரைத் தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையானளவு

செய்முறை:

ஆப்பிளை கழுவி அதன் தேவையற்ற பகுதியை (விதை அதனுடன் சேர்ந்த பகுதி) அகற்றி சிறு துண்டுகளாக வெட்டவும்.

வெங்காயத்தின் தோலையுரித்து குருனியாக வெட்டவும். எண்ணெயில், தேசிக்காய் சாறு (லெமன் ஜூஸ்), வெங்காயம், உப்பு, சீனி (சர்க்கரை), குவாக்கினை போட்டு கலக்கவும்.

இப்போது சாஸ் தயாராகிவிட்டது. கோவாவை சாஸில் போடவும். பின்பு பிளம்ஸ்(சுல்டானாஸ்) சுத்தம் செய்து சாஸில் போடவும்.

அதை குளிரான இடத்தில் வைக்கவும். பின்பு அதை எடுத்து அதில் கஜூ போட்டு உடனே பரிமாறவும்.

குறிப்புகள்:

வைட்டமின் சி நிறைந்த உணவு. கவனிக்க வேண்டிய விஷயங்கள் - ஆப்பிளை கழுவி அதன் தேவையற்ற பகுதியை (விதை அதனுடன் சேர்ந்த பகுதி)அகற்றி சிறு துண்டுகளாக வெட்டவும். வெங்காயத்தினை குருனியாக வெட்டவும். குளிரான இடத்தில் வைக்கவும். கஜூ போட்டவுடன் பரிமாறவும்.