ஆப்பிள் கப் பஃவ் பேஸ்ரி
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 2
பஃவ் பேஸ்ரி சீட் (fresh) - ஒரு பாக்கெட்
முந்திரிப்பருப்பு (கயூ) (சிறுதுண்டுகள்) - (25- 50)கிராம்
வெனிலா - ஒரு துளி (விரும்பினால்)
பிளம்ஸ் - 50 கிராம்
செய்முறை:
ஆப்பிளை தோல்சீவி அதன் தேவையற்ற பகுதிகளை அகற்றிய பின்பு ஆப்பிளை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
முந்திரிப்பருப்பு(கயூ), பிளம்ஸ், வெனிலா ஆகியவற்றை கலந்து இன்னொரு பாத்திரத்தில் வைக்கவும்.பஃவ் பேஸ்ரி சீட்டினை எடுத்து விரித்து பெரிய சதுரமாகவோ(9- 12துண்டுகள்) அல்லது வட்டமாகவோ வெட்டவும்.
அதனை ஸ்பொஞ் கேக் தட்டில் அல்லது சிறிய வட்ட பிஸ்ஸா தட்டில் உள்ள குழிகளின் (ஒருதட்டில் 12கப்புகள்/குழிகள் அமைக்கப்பட்டது) மேல் வெட்டிய பஃவ்பேஸ்ரி துண்டினை விரித்து வைக்கவும்.
அதன்பின்பு பஃவ்பேஸ்ரி சீட் விரிக்கப்பட்டுள்ள குழிகளில் ஆப்பிள்துண்டுகளை முன்பு தயாரித்த கலவையுடன் (முந்திரிப்பருப்பு(கயூ),பிளம்ஸ்,வெனிலா) கலந்து வைக்கவும்.
அதன்பின்பு கலவை வைக்கப்பட்ட தட்டுகளை அவனில் வைத்து பேக் செய்யவும் (250 டிகிரி Cயில் 10 - 15 நிமிடங்கள்).
பேக் செய்த பின்பு பேக் பண்ணிய தட்டை அவனிலிருந்து எடுத்து அதிலுள்ள ஆப்பிள் கப் பஃவ் பேஸ்ரியை சிறிய தட்டுகளிள் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணகூடியதும் வைட்டமின் A, B1, B2, B3, B5, B6, B9, C, கால்சியம், இரும்பு, மெக்னீஸியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், புரோட்டின், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்சத்து ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளதுமான ஒர் சிற்றுண்டியே ஆப்பிள் கப் பஃவ் பேஸ்ரி ஆகும்.
எச்சரிக்கை - ஆப்பிள், முந்திரிப்பருப்பு அலர்ஜி உடையவர்கள், சர்க்கரை நோயாளர், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்றுமுறை- வெனிலாக்கு பதிலாக தேன் அல்லது சீனி(சர்க்கரை)பாகு சேர்க்கலாம். ஆப்பிளை மட்டும் உள்ளீடாக வைக்கலாம் அல்லது முந்திரியபருப்பு(கயூ),பிளம்ஸ்,வெனிலா இவற்றில் மூன்றையோ அல்லது இரண்டை மட்டும் கலந்த கலவையை வைக்கலாம். விரும்பிய பிரட்டல் கறிகளையும் உள்ளீடாக வைக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயங்கள்-ஸ்பொஞ் கேக் தட்டில் (ஒரு தட்டில் 12 கப்புகள் அல்லது குழிகள் அமைக்கப்பட்டது) அல்லது குழியுள்ளது அல்லது கப்புள்ளது.