ஆப்பிள் அப்சைட் டவுன் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டர் (வெண்ணெய்) - 500 கிராம்

கோதுமைமா(மைதா) - 500 கிராம்

சீனி(சர்க்கரை) - 500 கிராம்

முட்டை - 8

ஆப்பிள் (புளிப்பற்றது) - 2

ஆப்பிள் எசன்ஸ் - அரை தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 4 தேக்கரண்டி

வெனிலா - 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பட்டர், சீனி போட்டு முட்டை அடிக்கும் பீட்டரினால் நன்றாக கலந்து அதனுடன் முட்டை சேர்த்து சீனி கரையுமாறு அடிக்கவும்.

சீனி நன்றாக கரைந்ததும் அதனுடன் கோதுமைமா (மைதா), பேக்கிங்பவுடர், ஆப்பிள் எசன்ஸ், வெனிலா ஆகியவற்றை சேர்த்து அடிக்கவும்.

பின்பு ஆப்பிளை தோல், விதை நீக்கி மெல்லிய அரை வட்டமாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பின்பு கேக் தட்டில் பட்டர் பூசி அதன் மேல் ஆப்பிள் துண்டுகளை அடுக்கி அதன் மேல் கேக் கலவையை ஊற்றி பேக் செய்யவும். கேக் பேக்(Bake)பண்ணியதும் பரிமாறவும்.

குறிப்புகள்:

ஆப்பிள் அப்சைட் டவுன் கேக் சுவையானதும் சத்து நிறைந்தது ஆகும்.வெந்தபின் கேக்கை தலை கீழாக வெட்ட ஆப்பிள் துண்டுகள் கேக்கின் மேற்புறமாக இருக்கும். ஆப்பிள் அப்சைட்டவுன் கேக் இருதய நோயாளர்,சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய - Baking time - 250°c - 20 minutes and 200°c -25 minutes