ஆப்பிள் ஃபை
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - ஒன்று மைதாமாவு - 3/4 கப் கோதுமை மாவு - கால் கப் பால் - கால் கப் சீனி - கால் கப் பேரீச்சம் பழம் - 2 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
மாவுடன் சிறிது உப்பு
சீனி
எண்ணெய் சேர்த்து கிளறி பிறகு அதில் பால் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து வைக்கவும். ஆப்பிளை தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.
கடாயில் பட்டர் போட்டு சூடானதும் அரைத்த ஆப்பிள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இதனுடன் சீனி சேர்த்து தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும். பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கிக் கொண்டு இறக்குவதற்கு முன் சேர்க்கவும்.
பிசைந்த மாவை சப்பாத்தி உருட்டுவது போல் செவ்வக வடிவில் தேய்க்கவும். இதில் ஆப்பிள் கலவையை நடுவில் வைக்கவும். சிறிது மைதாமாவை தண்ணீரில் கலந்து வைக்கவும். இந்த பேஸ்டை சப்பாத்தி ஓரம் முழுவதும் தடவி விடவும்.
செவ்வகமாக தேய்த்திருக்கும் சப்பாத்தியில் அகலமாக உள்ள பகுதிகளை ஒன்றன் மேல் ஒன்று வைத்து மடிக்கவும்.
ஆப்பிள் கலவை வெளியே வராதவாறு மேலும் கீழும் மடக்கி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் ஆப்பிள் ஃப்பையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான ஆப்பிள் ஃபை ரெடி.
இந்த குறிப்பினை அறுசுவை உறுப்பினரான திருமதி. சங்கரி வஸந்த் அவர்கள் வழங்கியுள்ளார்.