ஆட்டா மா தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டா மா - 2 கப்

ஓட் மீல்/வீட் பிரான் (Wheat Bran) - 1/2 கப்

பொடியாக வெட்டிய வெங்காயம் - 1/2கப்

செத்தல் மிளகாய் - 5

பெரிய சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு

தண்ணீர்

செய்முறை:

செத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.

பின்னர் எண்ணெயை சூடாக்கி அதனுள் பொடியாக வெட்டிய வெங்காயம், வெட்டிய செத்தல் மிளகாய், பெரிய சீரகம், கடுகு என்பவற்றைப் போட்டு தாளிக்கவும்.

ஆட்டா மா, ஓட் மீல்/வீட் பிரான், உப்பு என்பவற்றை போதுமான அளவு தண்ணீர் விட்டு தோசை மா பதத்திற்கு குழைக்கவும்.

பின்னர் அதனுள் தாளித்தவற்றைக் கொட்டிக் கலக்கவும்.

பின்னர் தோசைக் கல்லில் தோசைகளாக சுட்டு எடுக்கவும்

இது மிகவும் சுவையானது. இதனை சாம்பார், குழம்பு, பருப்பு என்பவற்றுடன் சாப்பிடலாம்.

குறிப்புகள்:

இந்த தோசை dietஇல் உள்ளவர்களுக்கும், டயபற்றிஸ் உள்ளவர்களுக்கும் நல்லது. இந்த தோசையை கரைத்தவுடன் சுட வேண்டும். அப்போதுதான் வார்ப்பதற்கு இலகுவாக இருக்கும். ஓட் மீல்/வீட் பிரான் (Wheat Bran) சேர்த்திருப்பதால் நேரம் செல்லச் செல்ல மா களியாகிவிடும். வார்ப்பது கஷ்டம். ஆனாலும் சிறிது தடிமனான அடை போல சுட்டு எடுக்கலாம். அதுவும் சுவையாக இருக்கும்.