அஸ்பேரகஸ் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அஸ்பேரகஸ் - ஒரு பன்ச் வெங்காயம் - பாதி பூண்டு - 3 பல் மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு தாளிக்க: கடுகு - கால் தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.

அஸ்பேரகஸை ஒவ்வொன்றாக ஒடித்து பார்த்து கனமான தண்டு பகுதியை நீக்கி விடவும்.

பிறகு நன்கு அலசி

சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு

கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். பின் தட்டி வைத்துள்ள பூண்டு

நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

பின் மஞ்சள் தூள்

நறுக்கி வைத்துள்ள அஸ்பேரகஸ் சேர்த்து சிறிது உப்பு தூவி வதக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள்

தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அஸ்பேரகஸ் வதக்கினாலே சீக்கிரம் வெந்து விடும். தண்ணீர் சேர்த்து வேக வைக்க கூடாது. பின் உப்பு சரிப்பார்த்து

மிளகு தூள் தூவி அடுப்பை நிறுத்தி விடவும்.

சுவையான அஸ்பேரகஸ் பொரியல் தயார். இது சாம்பார் சாதம்

ரசம் சாதம்

தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: