அஷ் ப்ரவுன்ஸ் (Hash Browns)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

பட்டர் - 2 மேசைக் கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கினை தண்ணீரில் வேகவைத்து பின் தோலினை உரித்து கொள்ளவும்.

வேகவைத்த உருளைக்கிழங்கினை காரட் துருவது போல துருவிக் கொள்ளவும்.

அதே போல பூண்டினையும் துருவி கொள்ளவும்.

ஒரு அடிகனமான பானில் பட்டரினை போட்டு உருக்கி அதில் துருவிய பூண்டினை சேர்த்து வதக்கவும்.

அதன் பின் துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கினை சேர்த்து அதன் மேல் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.

உருளைக்கிழங்கினை சேர்த்த பிறகு தீயினை குறைக்கவும்.

உருளைக்கிழங்கினை நன்றாக கரண்டியை வைத்து அழுத்திவிடவும்.

5 - 8 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கினை ஒரு பக்கம் சிறிது மொறுமொறுப்பாக ஆனபிறகு ஆம்லெடை திருப்பி போடவது போல திருப்பி போடவும்.

மேலும் 5 - 6 நிமிடம் வைத்து சூடாக பரிமாறவும்.

இப்பொழுது சுவையான அஷ் ப்ரவுன்ஸ் ரெடி.

குறிப்புகள்:

பெரும்பாலும் வெளிநாட்டவரின் காலை நேர உணவு இந்த அஷ் ப்ரவுன்ஸ். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

உருளைக்கிழங்கினை அடிக்கடி கிளற கூடாது. அப்படி கிளறினால் அஷ் ப்ரவுன்ஸ் உதிரியாகிவிடும். மிகவும் குறைந்த தீயினை உபயோகிக்க வேண்டும்.