அவரைக்காய் சைனீஸ் கூட்டு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவரைக்காய் - கால் கிலோ

வெங்காயம் - ஒன்று

வறுத்த காய்ந்த மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மேகி க்யூப் - அரைகட்டி

கறிவேப்பிலை -ஒரு கொத்து

எண்ணெய் - தாளிக்க

உப்பு - அரை டேபிள்ஸ்பூன்

மல்லிக்கீரை - ஒரு கைப்பிடி

செய்முறை:

அவரைக்காயை ஓர் இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பாதியை போட்டு நன்கு வதக்கவும்.

அதில் மிளகாய்தூளைப்போட்டு கிளறி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

பின் அதில் மேகி க்யூபை போட்டு காயை போட்டு வதக்கி மூடியை போட்டு மூடி விடவும்

இடையிடையில் கிளறவும் காய் வெந்ததும் மீதி வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் கிளறி மேலே மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

மேகி க்யூப்பை தூளாக்கி போடவும் இல்லையென்றால் கட்டியாக இருக்கும்