அவரைக்காய் சைனீஸ் கூட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவரைக்காய் - கால் கிலோ வெங்காயம் - ஒன்று வறுத்த காய்ந்த மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி மேகி க்யூப் - பாதி கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - தாளிக்க உப்பு - ஒரு தேக்கரண்டி மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

அவரைக்காயை ஒரு இன்ச் அளவுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பாதி அளவு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

அத்துடன் கறிவேப்பிலை மற்றும் மிளகாய்த் தூளைப் போட்டுக் கிளறவும்.

பிறகு மேகி க்யூப் மற்றும் அவரைக்காயைப் போட்டு வதக்கி

மூடி வைத்து வேகவிடவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறவும். அவரைக்காய் வெந்ததும் மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் கிளறிவிட்டு

மல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான அவரைக்காய் சைனீஸ் கூட்டு தயார்.

குறிப்புகள்: