அலப்ப (Helapa)
0
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 400 கிராம் துருவிய வெல்லம் (அ) கருப்பட்டி (அ) ப்ரவுன் சீனி - 100 கிராம் தேங்காய்த் துருவல் - ஒரு கப் உப்பு - அரை தேக்கரண்டி நறுக்கிய வாழையிலைத் துண்டுகள் - 20 (அ) 25
செய்முறை:
பவுலில் ராகி மாவுடன் துருவிய வெல்லம்
தேங்காய்த் துருவல் மற்றும் உப்புச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை பெரிய எலுமிச்சம்பழம் அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருட்டிய உருண்டைகளை வாழையிலையில் மெல்லிய சப்பாத்திகளாக தட்டி இலையுடன் சேர்த்து இரண்டாக மடிக்கவும்.
பிறகு நீராவியில் 10 - 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
சத்தான சுவையான அலப்ப (Helapa) தயார்.