அரேபிய பட்டர் பிஸ்கட் (1)
0
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 800 கிராம்
முட்டை - 2
சீனி - 1 கப்
உருக்கிய நெய் - 500 கிராம்
பேக்கிங்பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 4 துளி
செய்முறை:
முட்டையையும் மாவையும் நுரை வரும் வரை நன்கு கலக்கவும்
அதில் நெய்யையும் போட்டு கலக்கி மாவை போட்டு பவுடர் எசன்ஸ் எல்லாம் போட்டு நன்கு கலக்கி கீழே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை விரித்து அதன் மேலே மாவை வைத்து மேலே ஒரு பேப்பரை போட்டு மூடி மாவை அப்பளம் போல இட்டு விரும்பிய வடிவில் அச்சு வைத்து 280 F சூடாக்கிய அவனில் வைத்து மேலே லேசாக சிவந்து வரும் போது எடுத்து விடவும்.