அரேபியன் கப்சா ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 3 கப் வெங்காயம் - ஒன்று சிக்கன் - அரை கிலோ பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரிஞ்ஜி இலை - தலா 2 சிக்கன் க்யூப் - ஒன்று பூண்டு - 5 பல் மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி தக்காளி ப்யூரி (தக்காளி விழுது) - 2 தேக்கரண்டி காய்ந்த எலுமிச்சை தோல் - பாதி பாதாம் - 20 குங்குமப்பூ - சிறிது வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி உப்பு சிக்கனுடன் பிரட்டி வைக்க: மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு
செய்முறை:
பூண்டு
மிளகு
சீரகம் ஆகியவற்றைத் தனித்தனியாக நசுக்கி வைக்கவும். சிக்கனுடன் பிரட்டி வைக்க கொடுத்துள்ளவற்றை சிக்கனில் சேர்த்துப் பிரட்டி வைக்கவும்.
மசாலா சிக்கனுடன் சேர்ந்ததும் அதனை அரை பதமாக பொரித்து வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெய்
எண்ணெய் மற்றும் சிக்கன் பொரித்த எண்ணெயை ஊற்றி பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரிஞ்ஜி இலை தாளித்து
நசுக்கி வைத்துள்ள பூண்டு
மிளகு
சீரகம் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் பாதாம்
தக்காளி ப்யூரி மற்றும் சிக்கன் க்யூப் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் குங்குமப்பூ
காய்ந்த எலுமிச்சை தோல் சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி
உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசியைக் களைந்து போட்டு 15 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.
சுவையான அரேபியன் கப்சா ரைஸ் தயார். காரமான ரைத்தாவுடன் பரிமாறவும்.