அரியதரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பச்சை அரிசி - 500 கிராம் சிவப்பு பச்சை அரிசி - 175 கிராம் சீனி - 500 கிராம் அவித்த மைதா மாவு - ஒரு கைப்பிடி அளவு அரிசிக் குறுணல் - அரை கப் சுடுநீர் - சிறிதளவு எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

முதலில் இரண்டு அரிசியையும் 2 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

பின்பு அரிசியில் நீரை வடித்து இடிக்கவும் அல்லது கிரைண்டரில் அரைக்கவும். அரைத்த மாவை சலிக்கவும். 2 அல்லது 3 முறை அரைத்துச் சலிக்கவும். அதில் வரும் சிறு குறுணலை அரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சலித்தமாவு

எடுத்து வைத்துள்ள குறுணல்

சீனி

அவித்த மைதா மாவு

ஒரு மேசைக்கரண்டி எண்ணெய்

சுடுநீர் சேர்த்து குழைக்கவும்.

பின்பு அப்பாத்திரத்தை காற்று உள்ளே புகாதவாறு நன்றாக மூடி 4 மணிநேரம் வைக்கவும்.

மாவை எடுத்து அளவான உருண்டைகளாக்கி படத்தில் உள்ளது போல் உருண்டைகளை இலேசாக அமர்த்தவும்.

வாணலியை எண்ணெயை விட்டு சூடாக்கி

அமர்த்திய உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பொரிக்கும் போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து பொரிக்கவும்.

சுவையான அரியதரம் தயார்.

குறிப்புகள்: