அப்பிள் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அப்பிள் - 3

பட்டர் - 4 மேசைக்கரண்டி

வெட்டிய ஸ்வீட் வெங்காயம் - 1/4 கப்

கறித்தூள் - 1 தேக்கரண்டி

எதாவது ஒரு சீஸ் - 1/4 கப்

சோளமா - 2 தேக்கரண்டி

மைதா/கோதுமை மா - 1 கப்

உப்பு

செய்முறை:

மாவை தண்ணீர், உப்பு விட்டு தோசை மா பதத்திற்கு கரைத்து வைக்கவும்.

அப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

ஒரு பாத்திரத்தில் பட்டரைப் போட்டு சூடாக்கவும். பட்டர் உருகியதும் அதனுள் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதனுள் அப்பிள் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

பின்னர் அதனுள் கறித்தூள், சோளமாக்கரைசல் சேர்த்து கிளறவும்.

கலவை தடித்ததும் இறக்கவும்.

கரைத்த மாவை தோசைக்கல்லில் அல்லது பானில் ஊற்றி மெல்லிய சிறிது பெரிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

பின்னர் ஒவ்வொரு தோசையின் நடுவிலும் நீளவாக்கில் அப்பிள் கலவையை வைத்து இரு கரைகளையும் அதன் மேல் மூடி விடவும்.

சுவையான அப்பிள் தோசை தயார். சூடாக தனியே அல்லது அப்பிள் ஸோஸுடன் பரிமாறவும். (பரிமாறும் போது தோசையை நடிவில் சரிவாக வெட்டி இரு துண்டுகளாக்கி விடவும்.)

குறிப்புகள்: