அப்பிள் டெஸர்ட்
தேவையான பொருட்கள்:
பச்சை அப்பிள் - 2
வெள்ளை சீனி - 4 மேசைக்கரண்டி
லெமன் ஜூஸ் - 1 மேசைக்கரண்டி
துருவிய லெமன் தோல் - 1/2 மேசைக்கரண்டி
மைதா மா- 1 கப்
பிரவுண் சீனி - 1/4 கப்
பட்டர் - 1/4 கப்
கறுவாத்தூள் - 2 சிட்டிகை
செய்முறை:
அப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி வெள்ளை சீனி, லெமன் தூள், லெமன் தோல், சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு அல்லது அப்பிள் துண்டுகள் மென்மையாகும்வரை சமைத்து எடுத்து ஆற விடவும்.
மைதாமவினுள் கறுவாத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
பட்டர் சீனியை சேர்த்து நன்கு அடிக்கவும்.
பின்னர் இதனுள் மாக்கலவையை சேர்த்து 1/4 கப் தண்ணீரும் சேர்த்து குழைக்கவும். (சிறிது தண்ணித்தன்மையாக இருக்க வேண்டும்)
ஒரு நீண்ட பேக்கிங் தட்டில் அல்லது குக்கீ ஷீட்டில் பட்டர் தடவி அதன் மேல் இந்த கலவையை ஊற்றி சீராக (1/2 அங்குல உயரத்தில் )பரப்பவும்.
முற்சூடு பண்ணிய 300 Fஅவனில் வைத்து 15 நிமிடங்கள் அல்லது மேற்பக்கம் பிரவுண் ஆகும் வரை பேக் செய்து எடுத்து ஆறவிடவும்
ஆறிய பின் சிறிய துண்டுகளாக உடைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அல்லது ஐஸ்கிறீம் கப்பில் சிறிது உடைத்த துண்டுகளைப் போட்டு அதன் மேல் சிரிது அப்பிள் கலவையை போட்டு அதன் மேல் விப்ட் கிறீம் வைக்கவும். இவ்வாரு கிண்ணம் நிரம்பும் வரை செய்து பரிமாறவும்.
சுவையான அப்பிள் டெஸர்ட்.