அப்பிள் டார்ட்
தேவையான பொருட்கள்:
அப்பிள் - 2
லெமன் ஜூஸ் - 1 மேசைக்கரண்டி
முழு கோதுமை மா/ஆட்டா மா- 11/4 கப்
பிரெட் தூள் - 5 மேசைக்கரண்டி
பிரவுண் சீனி - 4 மேசைக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கறுவாத்தூள் - 1 சிட்டிகை
உப்பு
ஈஸ்ட் - 1/4 தேக்கரண்டி
ரவை - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி 4 மேசைக்கரண்டிசீனி, லெமன் ஜூஸ், கறுவாத்தூள் சேர்த்து குழைத்து ஊறவைக்கவும்.
மிதமான சூடுள்ள சிறிது தண்ணீரில் சீனி சேர்த்து அதனுள் ஈஸ்ட்டை போட்டு 5 நிமிடங்களுக்கு வைக்கவும்.
மாவினுள் உப்பு, எண்ணெய், ரவை, 1 மேசைக்கரண்டி சீனி சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதனுள் ஈஸ்ட் கரைசலை சேர்த்து தேவைப்பாட்டால் சிறிது தண்ணீரும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு குழைத்து 30 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
அவனை 350 Fஇல் முற்சூடு செய்யவும்.
ஒரு பாச்மன்ட் பேப்பரில் அல்லது அலுமினியம் ஃபாயிலில் சிறிது மாத்தூவி அதன் மேல் குழைத்த மாவை வைத்து பெரிய சப்பாத்தியாக தட்டவும்.
பின்னர் இதன் நடுவில் அப்பிள் கலவையை வைக்கவும்.
கரையில் உள்ள மாவை மேல்பக்கமாக மோதகம் செய்வது போல ஆனால் மெற்பக்கம் திறந்து இருக்கும் படியாக மடித்து விடவும்.
பின்னர் இதனை ஒரு பேக்கிங் தட்டிற்கு மாற்றி அல்லது அலுமினியம் ஃபாயிலுடன் அவனில் வைத்து 30 நிமிடங்களுக்கு பேக் செய்ய்து எடுக்கவும். (15 நிமிடங்களின் பின் எடுத்து அலுமினியம் ஃபாயிலால் மூடியும் வைக்கலாம்)
சுவையான அப்பிள் டார்ட் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதற்கு மைதா மாவையும் பயன்படுத்தலாம். ஆனால் ஆட்டா மா சத்தானது.