அன்னாசிப்பழ புடிங்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் - 1

கஸ்டர்ட் பவுடர் - 2 மேசைக்கரண்டி

பால்மா - 7 மேசைக்கரண்டி

சீனி - 7 மேசைக்கரண்டி

பொடித்த கஜு+ரெய்சின் - 1/4 கப்

அன்னாசி எஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

அன்னாசிப்பழத்தை தோல் சீவி சிறு மிகவும் சிறு துண்டுகளாக வெட்டவும்.

கஸ்டர்ட் பவுடரினுள் 5 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.

அதனுள் சீனியை சேர்த்து கிரைண்டரில் போட்டு நன்கு அடிக்கவும்.

அதனுள் சிறிது சிறிதாக பால்மாவையும் சேர்த்து அடிக்கவும்.

பின்னர் இக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பொடித்த கஜு, ரெய்சின் அன்னாசி எஸன்ஸ் போட்டு கலக்கவும்.

பின்னர் இக்கலவையில் சிறிதை ஒரு உருண்டையான கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் அன்னாசி துண்டுகளைப் போடவும். இவ்வாறு மாறி மாறி ஊற்றவும்.( படை படையாக ஊற்றவும்.)

பின்னர் இதனை ஆவியில் வைத்து அவித்தெடுக்கவும். (அல்லது ~10 நிமிடங்கள் பேக் செய்யவும்)

சுவையான அன்னாசி புடிங் தயார். இதனை குளிர வைத்து துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

அன்னாசிப்பழத்திற்கு பதிலாக அப்பிள், மாம்பழம், ஸ்ட்ரோபெர்ரி. வாழைப்பழம் என ஏனைய பழங்களும் அதற்கேற்றவாறு பழ எஸன்ஸும் பாவிக்கலாம். அசைவம் உண்பவர்கள் கஸ்டர்ட் பவுடருக்கு பதிலாக 1 முட்டையும் பாவிக்கலாம்.