அன்னாசிப்பழ ஜெல்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் (சிறிதாக வெட்டியது) - ஒரு கிலோகிராம்

தண்ணீர் - 4 டம்ளர் (80 மேசைக்கரண்டி)

ஜெலற்றீன் - ஒரு பாக்கெட்

தயிர் - கால் டம்ளர் (5 மேசைக்கரண்டி)

செய்முறை:

அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடானதும் அன்னாசிப்பழத்தை, 3 டம்ளர் (60 மேசைக்கரண்டி) தண்ணீர் விட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்தில் வடிக்கவும்.

பின்பு வடித்த நீர் சூடாக இருக்கும் போது அதனுள் ஜெலற்றீனை போட்டு நன்றாக கரைக்கவும்.

அதன் பின்பு அவித்து வைத்துள்ள அன்னாசிப்பழ துண்டுகளை கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

அரைத்தெடுத்த கலவையை கரைத்து வைத்துள்ள ஜெலற்றீன் கலவையில் ஊற்றி தயிரும் கலந்து நன்றாக பீட்டரினால் அடிக்கவும்.

பின்பு ஒரு அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி ஊறைபெட்டியில்(ஃபீரீசரில்) வைத்து நன்கு உறைந்த பின் எடுத்து ஐஸ்கிரீம் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்:

அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட், வைட்டமின் B1,B2,B3,B5,B6,B9,C, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஸியம் இப்படிப்பட்ட பலவித சத்துகள் அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசி பழத்தில் செய்த ஜெல்லியானது மேற்குறிப்பிட்ட சகல வகை சத்துகளுடனும் இனிப்பு சுவையுடனும் காணப்படும். இந்த ஜெல்லியின் சுவையை எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும் இதன் சுவையை அறிய இதனை செய்து சாப்பிடவும்.

மாற்று முறை - தயிர்க்கு பதிலாக யோக்கட் பாவிக்கலாம். எச்சரிக்கை - அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள் இந்த ஜெல்லியை வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.