அன்னாசிப்பழ சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் (சிறியது) - ஒன்று

மிளகாய்த்தூள் (தனி) - ஒரு தேக்கரண்டி(மட்டமாக)

உப்புத்தூள் - தேவையானளவு

சீனி - ஒரு மேசைக்கரண்டி(நிரப்பி)

வினிகர் - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - 2 சிட்டிகை

சாலட் இலைகள் - (2-3) துண்டுகள்

செய்முறை:

அன்னாசிப்பழத்தை தோல் சீவிக் அதன் கண்கள் தெரியாதவாறு மேற்பரப்பை துப்பரவாக்கவும்.

பின்பு அன்னாசிப்பழத்தை நிலைக்குத்தாக வைத்து கொண்டு நீளப்போக்கில் நான்கு சம துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

அதன் பின்பு அவற்றின் நடு நரம்பு பகுதியை வெட்டி நீக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒவ்வொரு துண்டுகளையும் அரை அங்குல தடிப்புடைய கால் வட்ட வடிவத துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

அதன் பின்பு வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள், உப்புத்தூள், சீனி, வினிகர் இவையாவற்றையும் போட்டு நன்றாக பிரட்டி கலக்கவும்.

பின்பு அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து சலாட் கோப்பையில் அலங்கார வடிவில் அடுக்கி சாலட் இலைகளை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்:

அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட், வைட்டமின் B1,B2,B3,B5,B6,B9,C, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஸியம் இப்படிப்பட்ட பல வித சத்துகள் அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்பழத்தில் செய்த சலாட்டானது மேற்குறிப்பிட்ட சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன் காணப்படும். இந்த சலாட்டின் சுவையை எல்லோரும் விரும்புவார்கள் நீங்களும் இதன்சுவையை இதனை செய்து சாப்பிட்டு அறியவும். எச்சரிக்கை - அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள் இந்த சாலட்டை வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.