அன்னாசிப்பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அன்னாசிதுண்டுகள் (சிறிதாக வெட்டியது) - 2 கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

வெங்காயம் சிறிதாக வெட்டியது - 2 மேசைக்கரண்டி (நிரப்பி)

சீனி (சர்க்கரை) - 2 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் (தனி) - ஒரு மேசைக்கரண்டி(நிரப்பி)

ஏலக்காய்த்தூள் - 3 சிட்டிகை

தண்ணீர் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் நெய்யை விட்டு அது சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் அரை பதமாக வதங்கியவுடன் வெட்டிய அன்னாசித்துண்டுகளை போட்டு வதக்கவும்.

அன்னாசித்துண்டுகள் முக்கால் பதமாக வதங்கியவுடன் அதனுள் தண்ணீர், சீனி, மிளகாய்த்தூள் ஏலக்காய்த்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.

இக்கலவை திரளாகத்(கட்டியாகத்) தொடங்கியதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

அன்னாசிப்பழத்தில் கார்போஹைட்ரேட், வைட்டமின் B1,B2,B3,B5,B6,B9,C, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஸியம் இப்படிப்பட்ட பலவித சத்துகள் அடங்கியது. இப்படிப்பட்ட அன்னாசிப்பழத்தில் செய்த பச்சடியானது மேற் குறிப்பிட்ட சகலவகை சத்துகளுடன் இனிப்பு கலந்த உறைப்புடன் சேர்ந்து மிக மிக சுவையுடன் காணப்படும். இதன் சுவையை இதனை செய்து சாப்பிட்டு அறியவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - (1)அன்னாசிதுண்டுகள்(சிறிதாக வெட்டியது. (2)வெங்காயம் அரை பதமாக வதங்கியவுடன் வெட்டிய அன்னாசித்துண்டுகளை போட்டு வதக்கவும். எச்சரிக்கை - அன்னாசிப்பழ அலர்ஜி உள்ளவர்கள் இந்த பச்சடியை வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்