அடைத்த பெல் பெப்பர் (Stuffed Bell Peppers)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெல் பெப்பர் - 6 பெரியது

சோறு(சாதம்) - 2கப்

ஒலிவ்/நல்லெண்ணெய்/எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

தக்காளி - 2

வெட்டிய வெங்காயம் - 1/4கப்

வெட்டிய உள்ளி - 4 பல்லு

உருளைக்கிழங்கு - 1

மொற்சரில்லா சீஸ்

பார்மஜான் சீஸ்

உப்பு

மிளகு தூள்

செய்முறை:

பெல் பெப்பரின் மூழ்ப்பகுதியை (காம்புப் பகுதியை) வட்டமாக வெட்டி நீக்கவும்.

உள்ளே இருக்கும் விதை பகுதியை எடுத்து விட்டு கொதிக்கும் தண்ணீரில் 4 - 5 நிமிடங்களுக்கு போட்டு வடித்து ஈரமில்லாது துடைத்து வைக்கவும்.

தக்காளி, மோற்சரில்லா சீஸை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

உருளைக்கிழங்கை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டி உப்பு பிரட்டி பொரித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒலிவ்/எண்ணெயை சூடாக்கி வெங்காயம், உள்ளியை போட்டு வதக்கவும்.

அவை வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் தீயை குறைத்து விட்டு சோறு(சாதம்), பொரித்த உருளைக்கிழங்கு, வெட்டிய மோற்சரில்லா, அரைவாசி பார்மஜான் சீஸ், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.

பின்னர் இந்த கலவையை பாதியாக வெட்டிய பெல் பெப்பரினுள் அடைத்து ஒரு பேகிங் பானில் அடுக்கி வைக்கவும்.

மீதி பார்மஜான் சீஸை ஒவ்வொரு அடைத்த பாதியின் மேலும் தூவி விடவும்.

பேகிங் பானில் பெல் பெப்பரின் அரைவாசி மூழ்கும் வரைக்கும் தண்ணீர் விடவும்.

அவனை 375 F இல் சூடாக்கி(Preheat) 25 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

அடைத்த பெல் பெப்பர் தயார். இதனை தக்காளி சோஸுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

சமைத்து மீதமாகி விட்ட கறி, சோறு(சாதம்) என்பவற்றை கலந்து தாளித்தும் இவ்வாறு அடைத்து செய்யலாம்.