அக்கரா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 500 கிராம்

கருவாடு - 150 கிராம்

இறால் - கால் கிலோ

பேக்கிங்பவுடர் - ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 10

அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 3/4 லிட்டர்

செய்முறை:

முதலில் கருவாட்டை கழுவி தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். இறாலை சுத்தம் செய்து சின்னதாக நறுக்கவும்.

பச்சை மிளாகாயை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு, கருவாட்டை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு மாவில் அனைத்துப் பொருட்களையும் போட்டு பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

அதன் பின்பு ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் மாவு கலவையை சின்ன போண்டாக்களாக உருட்டி போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். (இதற்கு தாய்லாந்து மிளகாய் பொருத்தமாக இருக்கும்)

குறிப்புகள்:

இது சைனீஸ் போண்டா வகையை சார்ந்தது. இந்த சிற்றுண்டியை வியட்நாமியன், ஆப்பிரிக்க மக்கள், வெள்ளைக்காரர்கள், நம்மவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.