அகத்திக்கீரை சொதி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - ஒரு சிறு கட்டு வெங்காயம் - பாதி பச்சை மிளகாய் - 2 உப்பு - அளவுக்கு மஞ்சள் தூள் - ஒரு பெரிய பிஞ்ச் கறிவேப்பிலை - ஒரு நெட்டு தேங்காய்ப்பால் - தலைப்பால் - ஒரு கப்

தண்ணீர்ப்பால் - 2 கப்

செய்முறை:

தேவையான அனைத்தையும் தயாராக வைக்கவும்.

பச்சை மிளகாய்

வெங்காயத்தை நீளமாக அரிந்து வைக்கவும்.

அரிந்து வைத்த மிளகாய் மற்றும் வெங்காயத்தை மஞ்சள் தூள்

அளவுக்கு உப்பு சேர்த்து தண்ணீர்ப்பாலில் அவியவிடவும்.

வெங்காயம் மற்றும் மிளகாயின் நிறம் மாற ஆரம்பித்ததும் தலைப்பால் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் திரைய விடாமல்

கரண்டியால் ஆற்றவேண்டும்.

ஆற்றிக் கொண்டே கீரையையும்

கறிவேப்பிலையையும் காம்போடு சொதியில் சேர்த்து அவிந்ததும் இறக்கவும். அதிக நேரம் அவியவிட வேண்டாம்.

சுடுசாதம்

இடியப்பத்திற்கு சூப்பராக இருக்கும். சுலபத்தில் கையால் உருவ வராது. காம்பை பிடித்துக்கொண்டு தான் இலையைச் சாப்பிட வேண்டும். சுவை அருமையாக இருக்கும். காம்போடு போடுவதால் கசப்பே இராது. சொதியில் கீரையின் சுவை இறங்கி இருக்கும். ஆனால்

அது கூட கசக்காது; அருமையாக இருக்கும்.

குறிப்புகள்: