ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 3 கப்
தண்ணீர் - 4 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை பட்டாணி - 50 கிராம்
பட்டர் - 75 கிராம்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும், பிறகு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
பிறகு ஒரு வாயகன்ற நாண் ஸ்டிக் பாத்திரத்தில் 25 கிராம் பட்டரை போட்டு அதில் அரிசியின் நீரை வடிகட்டி அதில் போட்டு விடாமல் கிளறவும். சிவக்காமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு 3 கப் சோறு ஆக்கக்கூடிய அளவு பாத்திரத்தில் மீதமுள்ள பட்டரை போட்டு அதில் பட்டை, கிராம்பு போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
வெங்காயம் சிவந்த பின்பு பச்சை பட்டாணி போட்டு வதக்கிய பின்பு வறுத்து வைத்த அரிசியை போட்டு ஒரு நிமிடம் கிளறி பிறகு அளந்து வைத்துள்ள தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து மேலே மூடி போட்டு வைக்கவும்.
தண்ணீர் சுண்டி வரும் தருவாயில் தீயை குறைத்து புழுங்க விடவும், பிறகு சோறு வெந்ததை உறுதி செய்த பின்பு இறக்கவும்.