ஃப்ரென்ச் டோஸ்ட்(French Toast)
தேவையான பொருட்கள்:
ப்ரெட் துண்டுகள் - 4
முட்டை - 3
பால் - 1/2 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
பட்டர் - 2 மேசைக் கரண்டி
பொடித்த சர்க்கரை - கடைசியில் தூவ
செய்முறை:
முதலில் முட்டையினை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
பின்பு அடித்து வைத்துள்ள முட்டையில் பாலினை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லினை காயவைத்து கொள்ளவும்.
ப்ரெட் துண்டினை எடுத்து முட்டை கலவையில் தோய்த்து வைத்து கொள்ளவும்.
கல்லில் பட்டரினை தடவி தோய்த்து வைத்துள்ள ப்ரெட் துண்டினை போட்டு வேகவிடவும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிட்டு சூடாக பரிமாறவும்.
சூடாக இருக்கும் பொழுதே பொடித்த சர்க்கரையை அதன் மீது தூவுவவும்.
இதனை மேப்பில் சிரெப் அல்லது தேனுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
வெளிநாட்டவர்களின் காலை நேர உணவு.
விரும்பினால் சர்க்கரையை முட்டை கலவையிலேயே சேர்த்து கொள்ளலாம்