ஃப்ரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 4 மைதா - 250 கிராம் சீனி - 100 கிராம் எண்ணெய் - பொரிக்க தேவையானது சோடா உப்பு - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சீனியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆப்பிளை தோல் நீக்கி விரல் கன அளவிற்கு வட்டமாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி விடவும்.
பின்பு மைதாவை சோடா உப்புடன் சேர்த்து நன்கு சலித்து உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய ஆப்பிளை மைதா மாவு கரைசலில் முக்கி எண்ணெயில் போட்டு இரு புறமும் வேக விட்டு எடுக்கவும்.
ஆப்பிளை மிதமான தீயில் வைத்து பொரித்து எண்ணெயை வடிக்கட்டி எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
பொரித்த பஜ்ஜியின் மேல் அரைத்த சீனியை பரவினாற் போல் தூவவும்
அனைத்து ஆப்பிள் துண்டுகளிலும் இதே போல் செய்யவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் .ஃபிரெஞ்சு ஆப்பிள் பஜ்ஜி ரெடி.