ஃப்ரூட் க்ரிஸ்ப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்ரிகாட் - 2 பீச் பழம் - 1 திராட்சை - 5 ஸ்ட்ராபெர்ரி - 1 எலுமிச்சம்பழச் சாறு - அரை தேக்கரண்டி மைதா மாவு - 1 1/2 தேக்கரண்டி சர்க்கரைப் பொடி - 2 தேக்கரண்டி ஸ்வீட்னர் - அரை தேக்கரண்டி(விரும்பினால்) டாப்பிங் 1: மைதா மாவு - 1 1/2 தேக்கரண்டி ஆர்கானிக் ப்ரவுன் ஷுகர் - 2 தேக்கரண்டி வெண்ணெய் - 2 தேக்கரண்டி பட்டை(பொடித்தது) - 1 சிட்டிகை டாப்பிங் 2 : ஓட்ஸ் - 2 தேக்கரண்டி ஆர்கானிக் ஷுகர் - 1 1/2 தேக்கரண்டி செர்விங்: வெனிலா ஐஸ்கிரீம் காட்டேஜ் சீஸ் (விருப்பமிருந்தால்)

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்

பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். மைதா மாவையும் சர்க்கரையையும் கலந்து வைக்கவும். டாப்பிங் 1 மற்றும் டாப்பிங் 2 இவற்றுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை

தனித் தனி கப்களில் கலந்து வைக்கவும்.

பேக்கிங் ட்ரேயில் குக்கிங் ஸ்ப்ரே அடிக்கவும் அல்லது சிறிது வெண்ணெயைத் தடவவும். நறுக்கிய பழங்களை அதில் போடவும்.

மைதாமாவு சர்க்கரை கலவையை

பழத் துண்டுகளுடன் கலக்கவும். ஸ்வீட்னர் அல்லது தேனை

அதன் மேல் ஊற்றவும்.

டாப்பிங் 1ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களின் கலவையை

மேலே பரப்பவும்.

அதன் மேல்

டாப்பிங் 2ன்(ஓட்ஸ் + சர்க்கரைப் பொடி) கலவையை

பரப்பவும்.

அவனை

350 டிகிரியில் முற்சூடு செய்யவும். பழக் கலவையை

30-35 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். (இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு

இந்த நேரம் போதுமானது. அதிகமாக செய்வதாக இருந்தால் 55-60 நிமிடங்களுக்கு பேக் செய்யலாம்)

கலவை பொன்னிறமாக மேலே பபிள்ஸுடன் வெந்திருக்கும். ப்ரூட் க்ரிஸ்ப் தயார்.

ஐஸ்கிரீம் மற்றும் சீஸ் எடுத்து வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில்

ஃப்ரூட் கிரிஸ்ப் சிறிது எடுத்து

அத்துடன் ஒரு தேக்கரண்டி ஐஸ்கிரீமுடன் பரிமாறவும். விரும்பினால்

சீஸ் சேர்த்து

சாப்பிடலாம்.

குறிப்புகள்: